கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஊத்தங்கரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் சுடுகாடு அருகே பனந்தோப்பு பகுதியில் சிங்காரப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.