கெலமங்கலம் பேரூராட்சியில் வாரச்சந்தை ரூ29 லட்சத்துக்கு ஏலம்
கெலமங்கலம் பேரூராட்சியில் வாரச்சந்தை ரூ29 லட்சத்துக்கு ஏலம் போனது.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் தேர்நிலை பேரூராட்சியில் 2022- 2023 -ம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி வளாகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மும்தாஜ்சையத் அசேன் முன்னிலை வகித்தார். 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அதிகபட்சமாக ரூ.29 லட்சத்து 15 ஆயிரத்து, 500-க்கு வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. ஏலத்தை ராமகிருஷ்ணன் எடுத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் விஜயன், இளநிலை உதவியாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் உமா சுரேஷ், நாகராஜ், விஜயஸ்ரீ, சீனிவாஸ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.