ரெயில்வே அதிகாரி கைது- ரூ.60 லட்சம் சிக்கியது
கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.60 லட்சம் சிக்கியது.
மும்பை
நாக்பூரில் மத்திய ரெயில்வே டிவிஷனல் உதவி என்ஜினீயராக இருப்பவர் சதுர்வேதி. இவர் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.60 லட்சம் சிக்கியது. இதற்கிடையே சதுர்வேதியை வருகிற 4-ந் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.