உளுந்து பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

உளுந்து பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2022-04-01 18:06 GMT
கரூர்
நச்சலூர், 
குளித்தலை வட்டார வேளாண்மை துறையின் சார்பாக நங்கவரம் குறு வட்டம் சூரியனூர் கிராமத்தில் உளுந்து மற்றும் பயிறு வகைகள் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதனை குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தொடங்கி வைத்தார். சூரியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வேளாண்மைத்துறையின் குளித்தலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் கணேசன் உள்பட பலர் விவசாயிகளுக்கு பயிற்சி குறித்து விளக்கினர். இதில், சூரியனூர், பாறைப்பட்டி, மேலப்பட்டி, குறிச்சி, நங்கவரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் தனபால் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்