ராமேசுவரம் நகராட்சி சுங்கச்சாவடியில் மோசடியா?

ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி சுங்கச்சாவடியில் ஆணையாளரின் கையெழுத்து மற்றும் சீல் இல்லாமல் வழங்கப்படும் கட்டண ரசீதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-01 18:03 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி சுங்கச்சாவடியில் ஆணையாளரின் கையெழுத்து மற்றும் சீல் இல்லாமல் வழங்கப்படும் கட்டண ரசீதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நகராட்சி சார்பில் கட்டணம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு பக்தர்கள் வரும் வாகனங்கள் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டு கார் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், வேன் ஒன்றுக்கு ரூ.150 பஸ்சுக்கு ரூ.200 கட்டணமும் நகராட்சியின் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கையெழுத்து இல்லாமல் ரசீது

இந்த நிலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்களுக்கு வழங்கப்படும் ரசீதில் நகராட்சி ஆணையாளரின் கையெழுத்து மற்றும் எந்த ஒரு முத்திரையும் இல்லாமலே வாகன ஓட்டிகளுக்கு ரசீது வழங்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. நகராட்சி ஆணையாளரின் கையெழுத்து, சீல் இல்லாமல் போலி ரசீது மூலம் வாகனங்களில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு மோசடி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
எனவே இதுகுறித்து ஆணையாளரின் கையெழுத்து இல்லாமல் போலி ரசீது மூலம் வாகனங்களில் வசூல் செய்யவும், அதற்கு துணையாக இருக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக ஆணையாளரின் கையெழுத்துடன் வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பக்தர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்