வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

மேல்பாப்பம்பாடியில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-01 17:45 GMT
செஞ்சி, 

செஞ்சி தாலுகா மேல்பாப்பம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி வரவேற்றார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார். 
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், அன்னம்மாள் ஆபிரகாம், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, சுகாதார மேற்பார்வையாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக  செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்