கம்பத்தில் கள்ளநோட்டுகள் அச்சடிப்பு ரூ.86 ஆயிரம் பறிமுதல்
கம்பத்தில் அச்சடிக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம்:
கள்ளநோட்டுகள்
தேனி மாவட்டம் கம்பத்தில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கம்பத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 என ரூ.86 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அந்த பணத்தையும், கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணை
இதையடுத்து போலீசார் குணசேகரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கள்ளநோட்டுகள் எப்போது இருந்து புழக்கத்தில் விடப்பட்டது?. யார், யாருக்கு இதில் தொடர்பு உள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.