கந்தசஷ்டி வழிபாட்டு குழு பழனிக்கு பாதயாத்திரை கிணத்துக்கடவில் இருந்து புறப்பட்டனர்
கந்தசஷ்டி வழிபாட்டு குழு பழனிக்கு பாதயாத்திரை கிணத்துக்கடவில் இருந்து புறப்பட்டனர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு கந்தசஷ்டி வழிபாட்டு குழு சார்பில் 42 -ம் ஆண்டு பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரத்தில் தொடங்கியது.
இதையொட்டி கந்தசஷ்டி வழிபாட்டு குழுவினர் கிணத்துக்கடவில் உள்ள பொன்மலை வேலாயுதசாமி மலையை சுற்றி கிரிவலம் நடந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அடிவாரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து கொண்ட பக்தர்கள் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாக 3-ம் தேதி பழனியை அடையும் இந்த குழுவினர் முருகனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கிணத்துக்கடவு திரும்புகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கிணத்துக்கடவு கந்த சஷ்டிவழிபாட்டு குழுவினர் செய்து உள்ளனர்.