நாமக்கல்லில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
நாமக்கல்லில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது நாமக்கல் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைடுத்து அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6,600 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.