கடலூர் அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கடலூர் அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Update: 2022-04-01 17:35 GMT

கடலூர்

கடலூர் அருகே தியாகவல்லியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எல்லைப்பிடாரி அம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்