வேப்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வேப்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வேப்பூர்
வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் சிலர் மாரியம்மன் கோவிலின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கோவிலிலிருந்த உண்டியலை திருடி சென்றுவிட்டனர். மேலும், கோவிலில் இருந்த குத்து விளக்கு, பித்தளை பொருட்களும் திருடுபோயிருந்தது.
மர்ம நபர்கள் திருடி சென்ற உண்டியலை கோவிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வயல்வெளியில் போட்டுவிட்டு, அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்து சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.