குடியாத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியாத்தம்
குடியாத்தத்தை அடுத்த முருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்பிகா. இவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிட்ட நிலையில் அறையின் உள்ளே சதீஷ் தூக்கில் தொங்கினார். இதனை கண்ட உறவினர்கள் உடனடியாக கதவை உடைத்து சதீஷை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.