வீடு புகுந்து திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
திண்டிவனத்தில் வீடு புகுந்து திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்நாடக மாநிலம் மைசூர் மேட்டுகலி பி.எம்.எஸ்.நகரை சேர்ந்த கிருஷ்ணப்பா மகன் மது(வயது 25), சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன், கோட்டூர் அத்திவாக்கத்தை சேர்ந்த சிவா(31) ஆகியோர் என்பதும், கடந்த 23.10.2021 அன்று திண்டிவனம் பூதேரியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மைசூரை சேர்ந்த குட்டி, கேரளாவை சேர்ந்த குமரேசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.