விருத்தாசலம்
மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பில்லூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த, உளுந்தூர்பேட்டை நட்பு நகர் பில்லூரை சேர்ந்த சையத் மக்பூல் மகன் சையத் உசேன் (வயது 49) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.