புதுச்சத்திரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு குழாய்கள் திருட்டு 3 பேர் கைது

புதுச்சத்திரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு குழாய்கள் திருட்டு 3 பேர் கைது

Update: 2022-04-01 17:10 GMT

சிதம்பரம்

புதுச்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் மனோகர் (வயது 62). இவர் நேற்று அதிகாலை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது, அந்த ஆலையில் இருந்த இரும்பு குழாய்களை திருடி, ஒரு மினிலாரியில் மர்ம நபர்கள் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த மனோகர், இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, அந்த மினிலாரியை மடக்கி பிடித்தனர். அதில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, கடலூர் மெயின் ரோடு ஆல்பேட்டை பகுதியை சேர்ந்த தாஜ்தீன் (49), குறிஞ்சிப்பாடி கீழ்பூவாணிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26), அதே பகுதியைச் சேர்ந்த ரசில்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ரூ. 1 லட்சம் மதிப்பிலான இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்