வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், ஸ்கேன், இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன், கோமதி தனபால், ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், தமிழ்மணி, செந்தில் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.