மன்மதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-04-01 16:58 GMT
குத்தாலம்:
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியை குத்தாலம் கோவில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலா தேவி தொடங்கி வைத்தார்.இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். முன்னதாக ஆதிசக்தி அம்பாள் மற்றும் மன்மதீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மன்மதன் இறைபணி மன்றம் மங்கள சக்தி ஸ்மிதி அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில்  பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் சித்ரா முத்துக்குமார், திருமுருகன், பட்டாபிராமன், மங்கள சக்தி ஸ்மிதி தலைவர் ஜெயகிருத்திகா, செயலாளர் ஜெயசித்ரா வரதராஜன் மற்றும் திரளான பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்