தேசிய பாராலிம்பிக் தடகள போட்டி தேனி வீரர் சாதனை

தேசிய பாராலிம்பிக் தடகள போட்டியில் தேனி வீரர் சாதனை படைத்தார்.;

Update:2022-04-01 22:06 IST
தேனி:
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பாராலிம்பிக் தடகள போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 28-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் தமிழக பாராலிம்பிக் அணி சார்பில் தேனியை சேர்ந்த 16 வயது தடகள வீரரான கஜன்கவுதம் 400 மீட்டர் ஓட்டத்தில் 2-வது இடம் பிடித்து ெவள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற கஜன்கவுதம் சென்னையில் மாநில அளவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை கணேஷ் குமார் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.

மேலும் செய்திகள்