3,750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 3,750 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.;

Update: 2022-04-01 16:00 GMT
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வரயான்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது கல்வராயன்மலை துரூர் கிராம ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 15 பேரல்களில் 3,750 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய மர்மநபர்கள் யார்? என்பதும் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்