இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கூடலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-04-01 14:51 GMT
கூடலூர்:
கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே இன்று மாலை நகர இந்து முன்னணி சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கள தேவி கண்ணகி கோவிலில் சித்ராபவுர்ணமி விழாவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்த வேண்டும், தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், கோவிலுக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் நகர தலைவர் தெய்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்