தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தொழிற்பேட்டை செல்லும் சாலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியை சேர்ந்த பெரியசாமி(வயது 58), என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 40 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.