அரசு பள்ளியில் திருடியவர் கைது செய்யப்பட்டார்
அரசு பள்ளியில் திருடியவர் கைது செய்யப்பட்டார்
சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி சத்தி ரோடு மாநகராட்சி அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சம்பவத் தன்று பள்ளி தலைமை ஆசிரியர் கலாமணி, கணினி இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு அறையின் பூட்டு உடைக்கப் பட்டு 2 புரஜெக் டர், 55 இன்ச் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய் தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, அரசு பள்ளியில் திருடிய தாக பீளமேடுபுதூர் மறைமலை அடிகள் நகரை சேர்ந்த நாராய ணன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 49) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத நிலையில், குழந்தைக்கு மருத்துவச் செலவு அதிகம் இருந்து உள் ளது.
இதற்கிடையே பள்ளியில் நடந்த மருத்துவ முகாமுக்கு வந்த போது அங்கு கணினி, டி.வி. இருப்பதை கோவிந்தராஜ் பார்த்து உள்ளார். உடனே அவர் திட்டமிட்டு பள்ளிக்குள் புகுந்து பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டார்.