திருநங்கைகள் சுய தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படும். கலெக்டர் தகவல்

திருநங்கைகள் சுய தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-04-01 13:49 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக திருநங்கைகள் தின நிகழ்ச்சி கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருநங்கை அம்மன் வேடமணிந்து அம்மன் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் கலெக்டர் திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது:-

 நமது அரசாங்கம் திருநங்கைளுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி வருகிறது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் தகுந்த இடத்தை கண்டறிந்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டா வழங்கப்படும். அதன் பின்னர் சிறப்பு திட்டம் அரசினால் தயார் செய்யப்பட்டு வருகிறது, அதன்மூலம் தகுதிவாய்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வீடு வழங்கப்படும்.

 அனைவருக்கும் மாவட்ட தொழில் மையம் மூலமாக சுய தொழில் தொடங்குவதற்கு தகுந்த பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்றுத் தரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் வேதநாயகம், உமா மற்றும் திருநங்கைள் அமைப்புகளின் பிரிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்