ஆம்பூரில் மூதாட்டி வீட்டில் திருடிய வாலிபர் கைது

ஆம்பூரில் மூதாட்டி வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-01 13:49 GMT
ஆம்பூர்

ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் வசித்து வருபவர் விமலா (வயது 66). இவரது வீட்டில் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து விமலா ஆம்பூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
 
சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (24) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் மூதாட்டி வீட்டில் புகுந்து பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்