கொரோனா இறப்பிற்கு நிவாரணம் பெற வழிமுறைகள்

கொரோனாவால் இறந்தவர்கள் நிவாரணம் பெற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-04-01 13:24 GMT
ராணிப்பேட்டை

கொரோனாவால் இறந்தவர்கள் நிவாரணம் பெற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை அரநுசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக www.tn.gov.in‌ இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. இதுவரை 1,075 மனுக்கள் பெறப்பட்டு 1,060 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 9 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

20.3.22-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 18.5.22-ந் தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்