காங்கயம் பரஞ்சேர்வழி கிராமம், காங்கேயம்பாளையம் பகுதியில் கரை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாணிக்கம் வயது 70 என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பூசாரி மாணிக்கம் வழக்கம் போல மதியம் 1 மணியளவில் பூஜைகளை முடித்து விட்டு, கோவில் கதவை போட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மாலை 6 மணியளவில் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பூஜை செய்ய பயன்படுத்தும் பித்தளை பொருட்களான மணி, தட்டு, அண்டா, சேவண்டி, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.