திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், ‘படிக வளர்ச்சி மற்றும் நானோ அறிவியல்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் பாலு வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி இயற்பியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இயற்பியல் துறை பேராசிரியர் வாசுகி கருத்தரங்கின் அமைப்பு செயலாளராக செயல்பட்டார்.
இக்கருத்தரங்கின் 2-ம் அமர்வில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஜோசப் ஜாண், படிக வளர்ச்சி மற்றும் அதன் பண்பறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருச்செந்தூர் வாவு வஹிதா மகளிர் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சிதம்பரம் கல்லூரி, நெல்லை ம.தி.தா. கல்லூரி, தூய யோவான் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீேதவி, பேராசிரியர்கள் செல்வராஜன், சேகர், லிங்கேஷ்வரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.