ஓடும் ரெயிலில் இருந்து குதித்து 2 மாணவிகள் தற்கொலை
மராட்டியத்தில் ஓடும் ரெயில் இருந்து குதித்து 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஓடும் ரெயில் இருந்து குதித்து 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
உடல் சிதறி பலி
மும்பை-கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் மங்கர்கேத் ரெயில்வே போஸ்ட் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது ரெயிலில் பயணித்த 2 மாணவிகள் திடீரென கீழே குதித்து விட்டனர். இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தீஸ்காரை சேர்ந்தவர்கள்
போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்த மாணவிகள் 19 வயதுடைய பேபி ராஜ்புத், பூஜா கிரி என்றும், அவர்கள் சத்தீஸ்கார் மாநிலம் ஜன்கிர் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அங்குள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்த மாணவிகள் இருவரும் உறவினர்கள் என்றும், கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்து இருந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி சீருடையுடன் பயணம் செய்த அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஊரல் போலீசார் வழக்குப்பதிவு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.