பழுதான டயர்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
கூடலூர் பகுதியில் பயன்படுத்த முடியாத டயர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நடு வழியில் அரசு பஸ்கள் அடிக்கடி நின்று விடுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பயன்படுத்த முடியாத டயர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நடு வழியில் அரசு பஸ்கள் அடிக்கடி நின்று விடுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
பழுதடைந்த பஸ்கள்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தரமான மற்றும் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பஸ்கள் பராமரிப்பின்றி இயக்கப்படுகிறது.
அரசு பஸ்களுக்கு போதிய உதிரிபாகங்கள் சப்ளை செய்யப்படாததால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான பஸ்களின் டயர்கள் மிகவும் தேய்ந்து எந்தவித பயன்பாட்டுக்கும் தேவை இல்லாத நிலையில்இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளுடன் செல்லும் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.
பயணிகள் தவிப்பு
இதன் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீலகிரி மலைப்பிரதேசம் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி இங்கு இயக்கக்கூடிய அரசு பஸ்களுக்கு தரமான உதிரி பாகங்களை பொருத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தற்போது கோடைகாலம் என்பதால் அரசு பஸ்களில் மழைநீர்வழிந்தோடும் வதில்லை. ஆனால் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை மழைக்காலத்தில் பஸ்ஸில் நனைந்தபடி பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பெரும்பாலான பஸ்களின் டயர்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.