புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

Update: 2022-04-01 12:42 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சத்யா, நகரசபை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மளிகைக்கடை மற்றும் எட்டயபுரம் ரோட்டில் உள்ள டீக்கடை ஆகியவற்றில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. 
மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகரசபை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்