கோத்தகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கோத்தகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமப்பகுதியில் ஒரு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது42), நடராஜ் (38), தியாகு (37), கோத்தகிரி கடைவீதியைச் சேர்ந்த சிவா (39) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி (53) என்பது தெரிய வந்தது. அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.13 ஆயிரத்து 170-ஐ பறிமுதல் செய்தனர்.