ரூ1 கோடிக்கு காய்கறி விற்பனை

ரூ1 கோடிக்கு காய்கறி விற்பனை;

Update: 2022-04-01 10:34 GMT
உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம்ரூ.1கோடியே 43லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை உழவர்சந்தை
உடுமலை உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் 1,900விவசாயிகள் மொத்தம் 7லட்சத்து 3 ஆயிரத்து 400 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம ்ரூ.1கோடியே 43லட்சத்து64ஆயிரத்து760க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 78ஆயிரத்து 154 பேர் வாங்கி பயனடைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதத்துடன், மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது  உழவர்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் எண்ணிக்கை 213 பேர் அதிகமாக இருந்தநிலையில், காய்கறிகள் வரத்து 1 லட்சத்து 51 ஆயிரத்து 525 கிலோ கூடுதலாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ.4லட்சத்து 34ஆயிரத்து 885 கூடுதலாக இருந்தது.  பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதம் 16ஆயிரத்து 909பேர் கூடுதலாக இருந்தது.

மேலும் செய்திகள்