மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர் ஒருவரால் மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-01 09:46 GMT
மாணவி பாலியல் தொடர்பாக கல்லூரியில் உள்ள புகார்கள் குழு (ஐ.சி.சி.) விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு விசாரணையும் ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்