சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தீ; பொருட்கள் எரிந்து சேதம்
சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சேலம்,
தொழிலாளர்கள்
சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் நந்தகுமார் (28), சீனிவாசன் (30). இவர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளர்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள ரமேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் வீட்டிலும் தீப்பிடித்தது.
எரிந்து சேதம்
இதையொட்டி சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் 3 பேரின் வீடு மற்றும் வீட்டில் இருந்த துணிகள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.அடுத்தடுத்து 3 வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.