துமகூரு சித்தகங்கா மடத்தில் பசவராஜ்பொம்மை நேரில் ஆய்வு

அமித்ஷா வருகையையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-31 21:11 GMT
துமகூரு: அமித்ஷா வருகையையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார். 

உள்துறை மந்திரி அமித்ஷா

துமகூரு சித்தகங்கா மடத்தில் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் 115-வது ஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று அந்த சித்தகங்கா மடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகள் குறித்து மடாதிபதியிடம் கேட்டறிந்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "சித்தகங்கா மடத்தில் நடமாடும் கடவுள் என பெயர் பெற்ற மடாதிபதி சிவக்குமார சுவாமியின் 115-வது ஜெயந்தி விழா நாளை (இன்று) நடக்கிறது. இந்த விழாவை அர்த்தப்பூர்வமாக நடத்த இந்த மடம் முடிவு செய்துள்ளது. எங்கள் தலைவர் உள்துறை மந்திரி அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் வருகிறார்கள். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நல்லிணக்கம்

அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க விழா ஏற்பாடுகளை நோில் பார்வையிட்டேன். சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவக்குமார சுவாமியின் வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்கும் பொருட்டு இந்த விழா நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் நல்லிணக்கம், அமைதியை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

குமாரசாமி என்னை ஆண்மகனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய கேள்விக்கு இடமில்லை. சீருடை விவகாரத்தில் அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்தது. நல்லிணக்கம், அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்தோம். அதே போல் வரும் நாட்களில் இதை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்