பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்
பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று வேப்பந்தட்டை தாலுகாவில் கை.களத்தூர் (கிழக்கு, மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு, கை.களத்தூர் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், குன்னம் தாலுகாவில் துங்கபுரம் (வடக்கு, தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு துங்கபுரம் (வடக்கு) கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.