புதிய குடிசை வீடுகள்கணக்கெடுப்பு பணி

புதிய குடிசை வீடுகள்கணக்கெடுப்பு பணி 4-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2022-03-31 20:46 GMT
பெரம்பலூர்:
2010-ம் ஆண்டிற்கு பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவான குடிசை வாழ் குடும்பங்கள் கணக்கெடுப்பு பணி வருகிற 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 28.2.2022-ம் நாளில் ஊராட்சி வீட்டு வரி கேட்பு பதிவேட்டின்படி உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பின் பணியின்போது தங்களது ஆதார் எண், வீட்டு வரி, வீடு எண் மற்றும் மின் இணைப்பு எண் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்பு குழுவிடம் வழங்கி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்