பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-31 20:42 GMT
அரியலூர்:

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பா.ம.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அளித்த அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் எதிரில் மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட பா.ம.க. தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்