காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-31 20:25 GMT
நெல்லை:
நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டின் அருகில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மொபட், கியாஸ் சிலிண்டர்கள், பெட்ரோல் கேன்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அங்கு பெண்கள் தரையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவது போன்றும், மணியடித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார். இதில் நெல்லை மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், துணைத்தலைவர் கவி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை-இ்ட்டமொழி

அம்பை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஜெயராஜ், மாவட்ட துணை தலைவர் அந்தோணிசாமி, நகர துணைத்தலைவர் ஜான் சவரிமுத்து, செயலாளர் இருதயராஜ், வட்டார தலைவர் சிவாஜி செல்லப்பா, மாவட்ட செயலாளர் சம்பத் சீனிவாசன், குத்தாலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இட்டமொழி அருகே சங்கனாங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி கிழக்கு வட்டார பொருளாளர் எம்.வடிவேல், வட்டார செயலாளர் ஐ.சிதம்பரம், ஊராட்சி வார்டு உறுப்பினர் சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மருதூர் மணிமாறன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 


மேலும் செய்திகள்