புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்

பாவூர்சத்திரத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-31 20:21 GMT
பாவூர்சத்திரம்:

நெல்லை - தென்காசி சாலையில் அருகே பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். 
அந்த ஆட்டோவில் பீடி பண்டல்கள் போல் சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ஆட்டோவில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பூபாலசமுத்திரம் மேலத்தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 32), தெற்கு பூலாங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னுத்துரை (30) என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து 284 கிலோ புகையிலை பொருட்களையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன், பொன்னுத்துரை ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்