நாகர்கோவில் பகுதியில் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கிய மணல் லார

நாகர்கோவில் பகுதியில் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கிய மணல் லாரி

Update: 2022-03-31 20:09 GMT
நாகர்கோவில், 
வடக்கன்குளத்தில் இருந்து கேரளாவுக்கு நேற்று முன்தினம் இரவு  எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்டா மார்க்கெட் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் லாரி வந்த போது நான்கு வழிச்சாலையில் பணி முடிக்கப்படாமல் இருந்த பள்ளத்தை டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் லாரி அந்த பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்கள் உடைந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து அவ்வளவாக இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், மாற்று லாரி கொண்டுவரப்பட்டு விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த எம்.சாண்ட் மணல் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்