வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவருக்கு அபராதம்
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர் கோவில் பீட் எல்லையில் அத்திரி மலை அமைந்துள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பினார்.
இதையடுத்து அந்த நபருக்கு வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.