வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு, நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு, நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-03-31 19:46 GMT
பெரம்பலூர்:

மறைமுக தேர்தல்
பெரம்பலூர் நகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு, ஒப்பந்தக்குழு, நியமனக்குழு ஆகிய குழு உறுப்பினர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நகர்மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான குமரிமன்னன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் அம்பிகா முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக நகராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா, 14-வது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லா, 17-வது வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ், 19-வது வார்டு கவுன்சிலர் சித்ரா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் ஒப்பந்தக்குழு உறுப்பினராக நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் சுசிலாவும், நியமனக்குழு உறுப்பினராக 12-வது வார்டு கவுன்சிலர் சசி இன்பென்டாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த கவுன்சிலர்கள் அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு ஆணையர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நகராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
குரும்பலூர் பேரூராட்சி
இதேபோல் குரும்பலூர் பேரூராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு, நியமன குழு ஆகிய குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மெர்சி தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு கவுன்சிலர் வை.செல்வராஜ், 2-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தன், 4-வது வார்டு கவுன்சிலர் பானுமதி, 6-வது வார்டு கவுன்சிலர் செல்வராணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நியமன குழு உறுப்பினராக 13-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த கவுன்சிலர்கள் அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு செயல் அலுவலர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு 1-வது தி.மு.க. கவுன்சிலர் ரபியுதீனும், 9-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மீராமொய்தீனும் போட்டியிட்டனர். இதில் 15 வாக்குகளில் மொத்தம் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ரபியுதீன் நியமனக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் எஹசான் தாஜ், 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி, 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மசூதா பேகம், 15-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் ஷமீம் பானு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகள்
வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் நியமனக் குழு உறுப்பினர் மற்றும் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் அரும்பாவூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இதில் நியமன குழு உறுப்பினராக 11-வது வார்டு கவுன்சிலர் வித்யாவும், வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 2-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜன், 4-வது வார்டு கவுன்சிலர் செல்வி, 6-வது வார்டு கவுன்சிலர் அப்துல்காதர், 8-வது வார்டு கவுன்சிலர் மோகன் ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த கவுன்சிலர்கள் அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோல் பூலாம்பாடி பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அருள்வாசகன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இதில் நியமனக் குழு உறுப்பினராக 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பூங்கொடி, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பரக்கத்துன்னிஷா, 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுதாகர், 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மஞ்சுளா, 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வராணி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்