சிவகாசி
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த பட்டாசு கடையில் உரிய அனுமதியின்றி 5 அட்டை பெட்டி களில் ரூ.17,500 மதிப்புள்ள சட்டி வகை பட்டாசுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கடையில் இருந்த சிவகாசி ஜவுளிகடை தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.