விருதுநகரில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகள்

விருதுநகரில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-03-31 19:38 GMT
விருதுநகர்
விருதுநகரில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திட்டப்பணி
விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி பூங்கா அருகே நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரு.2 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டும் திட்டப்பணியையும், விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் கட்டும் பணியினையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், திட்ட இயக்குனர் திலகவதி, நகரசபை கமிஷனர் சையது முஸ்தபா கமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாம் 
மேலும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நிதி வழிகாட்டு மையம் சார்பில் பின்னர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 140-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்ஆர். சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி அசோகன் மற்றும் சாத்தூர் ரகுராமன், விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிருதிவிராஜ், வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தா, பிரியதர்ஷினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்