பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அன்னவாசல்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
அன்னவாசல் அருகே வயலோகத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிராம தலைவர் ஜான்மிராசு தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரதிநிதி இப்ராம்சா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.