கொல்லங்கோட்டில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

கொல்லங்கோட்டில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-31 19:14 GMT
கொல்லங்கோடு,
கொல்லங்கோட்டில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிக்க முயற்சி
கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெனட் (வயது 38). இவர் தற்போது குடும்பத்துடன் பாலவிளை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பாலவிளையில் இருந்து காட்டுகடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென வழிமறித்து கத்தியை காட்டி ஜெனட் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜெனட் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலவிளையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கச்சேரிநடையை சேர்ந்த அனீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்