எஸ்.புதூர்,
எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தகுடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைப்பட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி, நாகமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.