தி.மு.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு
திருச்சி மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.;
திருச்சி, ஏப்.1-
திருச்சி மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இவை 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் மாநகராட்சி கூட்ட மன்ற அரங்கில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. 1-வது மண்டலத்துக்கு ஆண்டாள் ராம்குமார், 2-வது மண்டலத்துக்கு ஜெயநிர்மலா, 3-வது மண்டலத்துக்கு மதிவாணன், 4-வது மண்டலத்துக்கு துர்காதேவி, 5-வது மண்டலத்துக்கு விஜயலட்சுமி கண்ணன் ஆகியோர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கணக்குக்குழு, கல்விக்குழு, பணிகள் குழு, பொது சுகாதார குழு ஆகிய 4 குழுக்களுக்கு தலா 9 பேர் வீதம் 36 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்புக்குழு ஆகிய 2 குழுக்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நியமனக்குழு உறுப்பினர்
இதனை தொடர்ந்து நேற்று காலை நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. ஆணையர் முஜிபுர்ரகுமான் தேர்தலை நடத்தினார். திருச்சி மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினராக 57-வது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வத்தை தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்து இருந்தனர்.
தேர்தல் நடைபெற்ற போது, அரங்கில் அமர்ந்திருந்த முத்துச்செல்வம் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஆணையரிடம் முறையிட்டார். அப்போது அவரிடம், முதலில் நியமன குழு உறுப்பினர் தேர்தலை நடத்தி விட்டு, பிறகு இது குறித்து விவாதிப்போம் என ஆணையர் கூறினார்.
தி.மு.க.வேட்பாளர் மாற்றப்பட்டதால் பரபரப்பு
அதன்பிறகு நியமன குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்துச்செல்வம் மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க.வை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலரான நாகராஜன் திடீரென தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். உடனே கவுன்சிலர் முத்துச்செல்வம் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து நாகராஜனுக்கு சால்வை அணிவித்துவிட்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். இதையடுத்து நாகராஜனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் நியமனக்குழு உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆணையர் சான்றிதழ் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலைக்குழு தலைவர்கள் தேர்வு
இதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி அளவில் நிலைக்குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி கூட்டமன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் கணக்குக்குழு தலைவராக லீலா (49-வது வார்டு), பொது சுகாதார குழுத்தலைவராக நீலமேகம் (42-வது வார்டு), கல்விக்குழுத் தலைவராக பொற்கொடி (63-வது வார்டு), பணிகள் குழு தலைவராக கவிதா (58-வது வார்டு) ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு ஆணையர் சான்றிதழ் வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேர்வானவர்களுக்கு மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.