ராமநாதபுரம் போலீசாரிடம் வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு
மூக்கையூர் கடற்கரையில் காதல் ஜோடியிடம் அத்துமீறல் தொடர்பான வழக்கு விவரங்கள் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் அவருடன் வந்திருந்த மாணவியிடம் 3 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தின்போது காதலன் கண்முன்னே காதலியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில் சம்பவம் நடந்த இடம் ராமநாதபுரம் மாவட்ட எல்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றி தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகாக் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கண்ட குற்ற சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ராமநாதபுரம் மாவட்ட ேபாலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீசார் மேற்கண்ட வழக்கு விசாரணையை தொடங்கி தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.